ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி; அரையிறுதிக்கு முன்னேறிய மகளிர் அணி


ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி; அரையிறுதிக்கு முன்னேறிய மகளிர் அணி
x

ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் மகளிர் அணி 11-0 புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

புதுடெல்லி,

ஜப்பானின் கிபு மாகாணத்தில் ககாமிகாஹரா நகரில் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை 2023 ஆக்கி போட்டி நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த போட்டி ஒன்றில் இந்திய மகளிர் அணி மற்றும் சீன தைபே அணி விளையாடியது.

இந்த போட்டியில், அடுத்தடுத்து கோல் அடித்து இந்திய மகளிர் அணி, எதிரணியை திணறடித்தது. பந்துகளை சக வீராங்கனைகளுக்கு கடத்தி சென்று, அவற்றை கோல்களாக சேர்த்தது. எதிரணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் தடுப்பு ஆட்டத்திலும் சிறந்து விளங்கியது.

இதனால், இந்திய மகளிர் அணியானது 11-0 என்ற புள்ளி கணக்கில் சீன தைபே அணியை எளிதில் வீழ்த்தி, வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

இந்த வெற்றியால் ஏ பிரிவில் முதல் இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது. இந்த போட்டி தொடரில் இதுவரை வீழ்த்தப்படாத அணியாக இந்தியா விளையாடி உள்ளது.

இதுவரை நடந்த மொத்த போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியை சமன் செய்தும் உள்ளது. இதனை ஆக்கி இந்தியா வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.


Next Story