எனக்கு மிகவும் பிடித்த நினைவுகளில் அதுவும் ஒன்று - இந்திய ஆக்கி வீராங்கனை ரோப்னி

image courtesy: twitter/@TheHockeyIndia
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் தங்கப்பதக்கம் வென்றது தனக்கு மிகவும் பிடித்த நினைவுகளில் ஒன்று என்று ரோப்னி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய மகளிர் ஆக்கி அணி வீராங்கனையான ரோப்னி கடந்த வருடம் நடைபெற்ற மகளிரி ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வதில் முக்கிய பங்காற்றினார். இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய அவர் சிறப்பாக செயல்பட்டார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் தங்கப்பதக்கம் வென்றது தனக்கு மிகவும் பிடித்த நினைவுகளில் ஒன்று என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த ஆண்டு எனக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற முடிந்தது. இதன் மூலம் ஒரு முழுமையான வீராங்கனையாக முன்னேற முடிந்தது. என்னை ஆதரித்த பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள் மற்றும் ஆதரித்த சக வீராங்கனைகளுக்கும் நன்றி. பெண்கள் ஜூனியர் ஆகிய கோப்பையில் தங்கப்பதக்கம் வென்றது எனக்கு மிகவும் பிடித்த நினைவுகளில் ஒன்றாக உள்ளது"என்று கூறினார்.