இந்திய மகளிர் ஆக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்ற விதம் உத்வேகம் அளித்தது- நவ்ஜோத் கவுர்


இந்திய மகளிர் ஆக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்ற விதம் உத்வேகம் அளித்தது- நவ்ஜோத் கவுர்
x

காமன்வெல்த் போட்டியில் விளையாட முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக நவ்ஜோத் கவுர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நட்சத்திர வீராங்கனையாக திகழ்ந்து வருபவர் நவ்ஜோத் கவுர். 2012 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானதிலிருந்து, அவர் அணியின் அனைத்து முக்கிய போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளார்.

மேலும் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் சில சிறந்த வெற்றிகளில் அவர் இடம்பெற்றுள்ளார். இருப்பினும், 27 வயதான அவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் சமீபத்தில் முடிவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி போட்டி தொடங்குவதற்கு முன்பே அவர் தாயகம் திரும்பினார்.

இந்த நிலையில் தற்போது அவர் அது குறித்து பேசியுள்ளார். நவ்ஜோத் கவுர் கூறுகையில், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அப்படி வெளியேறியது ஏமாற்றமாக இருந்தது. அதை ஏற்றுக்கொள்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

இதற்கு முன் எந்த ஒரு பெரிய போட்டியையும் நான் தவறவிட்டதில்லை. எனவே எனது வாழ்க்கையில் முதல் முறையாக இந்த சூழ்நிலையை நான் எதிர்கொண்டேன்" என தெரிவித்தார்.

வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணி குறித்து பேசிய நவ்ஜோத், "எனது குடும்பத்துடன் அனைத்து போட்டிகளையும் பார்த்தேன். மிகக் குறைந்த வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்றது மனவேதனையாக இருந்தது.

ஆனால் இந்திய அணி மீண்டும் போராடி வெண்கலப் பதக்கத்தை வென்ற விதம் உண்மையிலேயே உத்வேகம் அளிப்பதாக இருந்ததாக தெரிவித்தார்.


Next Story