மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு


மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Nov 2023 10:39 AM GMT (Updated: 9 Nov 2023 10:46 AM GMT)

2023 மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி,

2023 மகளிர் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி வரும் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 10-ந் தேதி வரை நடைபெற உ ள்ளது. மகளிர் ஜூனியர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம் பெற்றுள்ளது. நவம்பர் 29 அன்று கனடாவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணி, அதற்கு அடுத்ததாக நவம்பர் 30-ந் தேதி ஜெர்மனியுடன் விளையாடுகிறது. டிசம்பர் 2-ம் தேதி நடைபெறும் போட்டியில் பெல்ஜியத்துடன் விளையாடுகிறது.

இந்த நிலையில் 2023 மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய அணி:

கோல்கீப்பர்கள்: குஷ்பு, மாதுரி கிண்டோ

தடுப்பாட்டம் : நீலம், ப்ரீத்தி (கேப்டன்), ஜோதி சிங், ரோப்னி குமாரி

நடுகளம் : மஹிமா டெடே, மஞ்சு சோர்சியா, ஜோதி சாத்ரி, ஹினா பானோ, சுஜாதா குஜூர், ருதுஜா தாதாசோ பிசல்

முன்களம் : சாக்ஷி ராணா, மும்தாஜ் கான், அன்னு, தீபிகா சோரெங், டிபி மோனிகா டோப்போ, சுனெலிதா டோப்போ

மாற்று வீராங்கனைகள் : தூணோஜம் நிருபமா தேவி, ஜோதி எதுலா


Next Story