உலகக் கோப்பை ஆக்கி போட்டி: நெதர்லாந்து அணி புவனேஸ்வர் வருகை


உலகக் கோப்பை ஆக்கி போட்டி: நெதர்லாந்து அணி புவனேஸ்வர் வருகை
x

Image Courtesy : @TheHockeyIndia twitter

ரூர்கேலாவில் வருகிற 14-ந் தேதி நடைபெறும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து, மலேசியாவை எதிர்கொள்கிறது.

புவனேஸ்வர்,

15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், ரூர்கேலாவில் வருகிற 13-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்க 3 முறை சாம்பியனான நெதர்லாந்து ஆக்கி அணி விமானம் மூலம் நேற்று ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் வந்தடைந்தது. விமான நிலையத்தில் அந்த அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நெதர்லாந்து அணி 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து, மலேசியா, சிலி ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். ரூர்கேலாவில் வருகிற 14-ந் தேதி நடைபெறும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து, மலேசியாவை எதிர்கொள்கிறது.

நெதர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெரோன் டெல்மீ நேற்று அளித்த பேட்டியில், 'கடந்த உலக போட்டியை ஒப்பிடுகையில் தற்போதைய அணி முற்றிலும் மாறுபட்டதாகும். எங்கள் அணியில் போதிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாதது மிகப்பெரிய சவாலாகும். இந்த சவாலை சமாளித்து உலகக் கோப்பை போட்டியில் எப்படி செயல்படபோகிறோம் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

எங்கள் அணி மீது எனக்கு முழுநம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவோம். எங்களது முதல் இலக்கு கால்இறுதிக்கு தகுதி பெறுவது தான். இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் எங்களால் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.




Next Story