உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: 2–வது ஆட்டத்தில் சிந்து தோல்வி


உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: 2–வது ஆட்டத்தில் சிந்து தோல்வி
x
தினத்தந்தி 15 Dec 2016 11:30 PM GMT (Updated: 15 Dec 2016 6:59 PM GMT)

டாப்–8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி துபாயில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவில் வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகிறார்கள். இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய வீராங்கனை பி.வி.ச

துபாய்,

டாப்–8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி துபாயில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவில் வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகிறார்கள். இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தொடக்க ஆட்டத்தில் ஜப்பானின் யமாகுச்சியை வென்று இருந்தார்.

இந்த நிலையில் சிந்து தனது 2–வது லீக்கில் நேற்று சீனாவின் சன் யுவை எதிர்கொண்டார். 49 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் சிந்து 15–21, 17–21 என்ற நேர் செட்டில் தோல்வியை தழுவினார். சிந்து கடைசி ஆட்டத்தில் உலக சாம்பியனும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஸ்பெயினின் கரோலினா மரினுடன் இன்று மோதுகிறார். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும். ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் கரோலினாவிடம் சிந்து தோல்வி கண்டது நினைவிருக்கலாம்.


Next Story