துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 19 Dec 2016 9:06 PM GMT (Updated: 19 Dec 2016 9:06 PM GMT)

* டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முச்சதம் அடித்து சாதனை படைத்த இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண்நாயருக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலில் கருண்ந

* 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2017) ஏப்ரம், மே மாதத்தில் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. அடுத்த சீசனுக்கான வீரர்களை அணிகளுக்குள் மாற்றி கொள்ள வருகிற 15–ந் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில் 8 அணிகளும் பல வீரர்களை தக்க வைத்து இருக்கிறது. தேவையற்ற வீரர்களை விடுவித்து இருக்கிறது. டோனி தலைமையிலான புனே அணி 16 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) உள்பட 11 வீரர்களை விடுவித்து இருக்கிறது. குஜராத் அணி 16 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு 6 வீரர்களை விடுவித்து இருக்கிறது. பஞ்சாப் 19 வீரர்களை தக்கவைத்ததுடன் 4 வீரர்களை விடுவித்துள்ளது. கொல்கத்தா அணி 14 வீரர்களை தக்கவைத்து கொண்டுள்ளது. 9 வீரர்களை விடுவித்து இருக்கிறது. மும்பை அணி 20 வீரர்களை தக்கவைத்து விட்டு 8 வீரர்களை விடுவித்துள்ளது. டெல்லி அணி 18 வீரர்களை தக்கவைத்து கொண்டு 7 வீரர்களையும், பெங்களூரு அணி 20 வீரர்களை தக்க வைத்து கொண்டு 10 வீரர்களையும், ஐதராபாத் அணி 17 வீரர்களை தக்க வைத்து கொண்டு 6 வீரர்களையும் விடுவித்து இருக்கின்றன.

* டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முச்சதம் அடித்து சாதனை படைத்த இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண்நாயருக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலில் கருண்நாயர் மற்றும் சிறந்த ஆல்–ரவுண்டர் அஸ்வின் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* உலக மற்றும் ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான 31 வயது சரிதாதேவி தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையாக மாற இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக அவர் இந்தியன் குத்துச்சண்டை கவுன்சிலுடன் 2 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளார்.


Next Story