தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக அணிகள் தோல்வி


தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக அணிகள் தோல்வி
x
தினத்தந்தி 24 Dec 2016 8:46 PM GMT (Updated: 24 Dec 2016 8:46 PM GMT)

சென்னையில் நேற்று தொடங்கிய தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில் தமிழக அணிகள் இரு பிரிவிலும் தோல்வி கண்டது. தேசிய கைப்பந்து இந்திய கைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கைப்பந்து சங்கம் ஆகியவை சார்பில் ஜேப்பியார் என்ஜினீயரிங் கல்லூரி ஆதரவுடன் 65–வது தேசிய சீனியர

சென்னை,

சென்னையில் நேற்று தொடங்கிய தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில் தமிழக அணிகள் இரு பிரிவிலும் தோல்வி கண்டது.

தேசிய கைப்பந்து

இந்திய கைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கைப்பந்து சங்கம் ஆகியவை சார்பில் ஜேப்பியார் என்ஜினீயரிங் கல்லூரி ஆதரவுடன் 65–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியை தொடங்கி வைத்த போட்டி அமைப்பு குழு சேர்மன் ரெஜினா முர்லிக்கு வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச் செயலாளர் ராம்அவ்தார் சிங் ஜகார், பொருளாளர் ரத்தின் ராய் சவுத்ரி, சென்னை ஸ்பைக்கர்ஸ் நிர்வாக துணைத்தலைவர் ராஜசேகரன், தமிழ்நாடு கைப்பந்து சங்க துணை சேர்மன் பாலசந்தர், முன்னாள் சர்வதேச வீரர் ஜெ.நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஆண்கள் பிரிவில் 25 அணிகளும், பெண்கள் பிரிவில் 23 அணிகளும் பங்கேற்றுள்ளன. ஆண்கள் பிரிவில், கடைசி நேரத்தில் மிசோரம் அணி விலகி விட்டது.

தமிழக அணி தோல்வி

ஆண்களில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் சர்வீசஸ் அணியை எதிர்கொண்டது. 2 மணி 5 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் தமிழக அணி 25–27, 29–31, 25–22, 25–22, 17–19 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. சர்வீசஸ் அணியில் நவீன்குமார், பங்கஜ் ஷர்மாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. மற்றொரு ஆட்டத்தில் ரெயில்வே அணி 21–25, 20–25, 25–20, 25–22, 17–15 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தியது. இதே போல் பஞ்சாப் அணி தன்னை எதிர்த்த உத்தரபிரதேசத்தை 25–19, 25–21, 25–20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி கண்டது.

பெண்கள் பிரிவிலும் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழக அணி தனது முதல் லீக்கில் 25–27, 25–14, 8–25, 17–25 என்ற செட் கணக்கில் தெலுங்கானாவிடம் தோல்வியை தழுவியது. மற்றொரு ஆட்டத்தில் ரெயில்வே அணி 25–18, 25–10, 25–18 என்ற நேர் செட்டில் மராட்டியத்தை தோற்கடித்தது.

இந்த போட்டியில், சி, டி, இ, எப். பிரிவு லீக் ஆட்டங்கள் ஜேப்பியார் கல்லூரி

இந்தியன் வாலிபால் லீக்

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில், இந்தியன் வாலிபால் லீக், இந்தியன் பீச் வாலிபால் லீக் (இருபாலருக்கும்) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் இந்திய கைப்பந்து சம்மேளனம், இதில் எந்தெந்த வீரர், வீராங்கனைகளை சேர்ப்பது என்பதை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் போட்டி அட்டவணை வெளியிடப்படும். வீரர்கள் ஏலம் மூலம் அணிகளுக்கு ஒதுக்கப்படுவார்கள்.


Next Story