துளிகள்
லோதா கமிட்டி சிபாரிசுகளுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கத்தில் பதவியில் இருக்கும் நிர்வாகிகள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
* லோதா கமிட்டி சிபாரிசுகளுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கத்தில் பதவியில் இருக்கும் நிர்வாகிகள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் கேரள கிரிக்கெட் சங்க தலைவர் டி.சி.மேத்யூ, செயலாளர் ஆனந்த நாராயணன் ஆகியோர் தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். 7 மாதம் பதவி காலம் எஞ்சி இருக்கும் நிலையில் இருவரும் விலகல் முடிவை மேற்கொண்டுள்ளனர். கொச்சியில் நேற்று நடந்த கேரள கிரிக்கெட் சங்க அவசர கூட்டத்தில் புதிய தலைவராக பி. வினோத், செயலாளராக ஜெயேஷ் ஜார்ஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேத்யூ 20 ஆண்டுகளும், ஆனந்த நாராயணன் 11 ஆண்டுகளும் நிர்வாக பதவியில் இருந்துள்ளனர். கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் ஒருவர் அதிகபட்சமாக 9 ஆண்டுகள் வரை தான் இருக்க வேண்டும் என்பது லோதா கமிட்டி சிபாரிசுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
* ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் பதக்கத்தை நெருங்கி கோட்டை விட்டாலும், வால்ட் பிரிவில் அசத்தி அனைவரையும் வியக்க வைத்தார். தீபா கர்மாகருக்கு, ஐதராபாத் மாவட்ட பேட்மிண்டன் சங்கம் சார்பில் சொகுசு கார் (பி.எம்.டபிள்யூ) பரிசாக வழங்கப்பட்டது. திரிபுராவை சேர்ந்த தீபா கர்மாகர் தனது மாநிலத்தில் அந்த காரை வைத்து பராமரிப்பது கடினம். எனவே தனக்கு பரிசை ரொக்கமாக அளித்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனை ஏற்று ஐதராபாத் பேட்மிண்டன் சங்கம் அவருக்கு காருக்கு பதிலாக ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி இருக்கிறது.
* லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்தாததால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து பாரதீய ஜனதா எம்.பி.யான அனுராக் தாகூரை அதிரடியாக நீக்கி சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இது குறித்து மத்திய விளையாட்டு மந்திரி விஜய் கோயலிடம் கருத்து கேட்ட போது பதில் அளிக்க மறுத்து விட்டார். இது சுப்ரீம் கோர்ட்டின் முடிவு. விளையாட்டு அமைச்சகத்துக்கு இதில் எந்தவித பங்கும் கிடையாது என்று அவர் கூறினார். தேசிய விளையாட்டு நடத்தை விதியை மேம்படுத்த கமிட்டி அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் செயலாளரை பதவி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருப்பது சரியான நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story