துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 3 Jan 2017 7:49 PM GMT (Updated: 3 Jan 2017 7:49 PM GMT)

* அகில இந்திய பல்கலைக்கழக பால் பேட்மிண்டன் போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். அணி கடைசி லீக் ஆட்டத்தில் 32–35, 35–28, 35–21 என்ற செட் கணக்கில் மங்களூரு பல்கலைக்கழக

* பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சானியா மிர்சா (இந்தியா)-பெதானி மாடக் சான்ட்ஸ் (அமெரிக்கா) ஜோடி 6-1, 6-1 என்ற நேர்செட்டில் அலிஸி கார்னெட் (பிரான்ஸ்)-எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்) இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

* அகில இந்திய பல்கலைக்கழக பால் பேட்மிண்டன் போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். அணி கடைசி லீக் ஆட்டத்தில் 32-35, 35-28, 35-21 என்ற செட் கணக்கில் மங்களூரு பல்கலைக்கழக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெண்கள் பிரிவில் மங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

* பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று கொழும்பில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக 34 வயதான மிதாலிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி வருமாறு:- மிதாலிராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, திருஷ்காமினி, வேதா கிருஷ்ணமூர்த்தி, தேவிகா வைத்யா, சுஷ்மா வர்மா, ஜூலன் கோஸ்வாமி, ஷிக்ஹா பாண்டே, சுகன்யா பரிதா, பூனம் யாதவ், எக்தா பிஸ்த், ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா.

* முன்னாள் உலக சாம்பியன் சரிதாதேவியை தொடர்ந்து மற்றொரு இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான பிங்கி ஜங்ராவும் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் களம் இறங்க முடிவு செய்துள்ளார். இதற்காக தொழில்முறை குத்துச்சண்டை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருக்கும் அவர் அமெச்சூர் குத்துச்சண்டை போட்டியிலும் தொடர்ந்து பங்கேற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

* டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குருப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் புனேயில் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வீரர் ரோகன் போபண்ணா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது கசிந்து இருக்கிறது. டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக சுற்று போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயம் என்று பொய்யான காரணத்தை கூறி ரோகன் போபண்ணா போட்டியில் இருந்து விலகியதால் தான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்று அகில இந்திய டென்னிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

* நேப்பியரில் நேற்று நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் வங்காளதேசம் நிர்ணயித்த 142 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் எட்டியது. நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் 73 ரன்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


Next Story