மலேசிய பேட்மிண்டன் போட்டி சாய்னா, அஜய் ஜெயராம் 2–வது சுற்றுக்கு தகுதி


மலேசிய பேட்மிண்டன் போட்டி சாய்னா, அஜய் ஜெயராம் 2–வது சுற்றுக்கு தகுதி
x
தினத்தந்தி 18 Jan 2017 9:04 PM GMT (Updated: 18 Jan 2017 9:04 PM GMT)

மலேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சரவாக் நகரில் நடந்து வருகிறது.

சரவாக்,

மலேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சரவாக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21–9, 21–8 என்ற நேர்செட்டில் சாசினீ கோர்பாக்கை (தாய்லாந்து) தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21–10, 17–21, 21–14 என்ற நேர்செட்டில் மலேசியாவின் ஜுன் ஹாவ் லியோங்கை வீழ்த்தி 2–வது சுற்றுக்குள் நுழைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மனு அட்ரி, ஜூவாலா கட்டா ஜோடி 21–19, 21–18 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் லுக்ஹி அப்ரி–ரின் அமெலியா இணையை தோற்கடித்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் ரெட்டி–அஸ்வினி பொன்னப்பா ஜோடி அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது.


Next Story