மலேசிய பேட்மிண்டன் போட்டி: அரைஇறுதியில் சாய்னா


மலேசிய பேட்மிண்டன் போட்டி: அரைஇறுதியில் சாய்னா
x
தினத்தந்தி 20 Jan 2017 7:50 PM GMT (Updated: 20 Jan 2017 7:50 PM GMT)

மலேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சரவாக் நகரில் நடந்து வருகிறது.

சரவாக்,

மலேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சரவாக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், இந்தோனேஷியாவின் பிட்ரினியை சந்தித்தார். 40 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் சாய்னா நேவால் 21-15, 21-14 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறதியில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 13-21, 8-21 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியா வீரர் அந்தோணி சினிசுகா ஜின்டிங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார். 

Next Story