தேசிய ஜூனியர் கைப்பந்து: தமிழக பெண்கள் அணி ‘சாம்பியன்’


தேசிய ஜூனியர் கைப்பந்து: தமிழக பெண்கள் அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 20 Jan 2017 8:07 PM GMT (Updated: 20 Jan 2017 8:07 PM GMT)

43-வது தேசிய ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்காவில் நடந்தது.

பெங்களூரு,

43-வது தேசிய ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்காவில் நடந்தது. இதன் பெண்கள் இறுதிப்போட்டியில் தமிழக அணி 25-13, 25-20, 25-17 என்ற நேர்செட்டில் அரியானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கர்நாடகா அணி 3-வது இடத்தையும், மராட்டிய அணி 4-வது இடத்தையும் பிடித்தன. ஆண்கள் இறுதிப்போட்டியில் தமிழக அணி 25-27, 23-25, 23-25 என்ற நேர்செட்டில் போராடி கர்நாடகாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியது. அரியானா 3-வது இடத்தையும், உத்தரபிரதேசம் 4-வது இடத்தையும் பெற்றன. சாம்பியன் பட்டம் வென்ற தமிழக பெண்கள் அணிக்கு ரூ.50 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த தமிழக ஆண்கள் அணிக்கு ரூ.40 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. 

Next Story