துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 22 Jan 2017 2:46 AM IST (Updated: 22 Jan 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியா– பாகிஸ்தான் அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று (இந்திய நேரப்படி காலை 8.50 மணி) நடக்கிறது.

* ஆஸ்திரேலியா– பாகிஸ்தான் அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று (இந்திய நேரப்படி காலை 8.50 மணி) நடக்கிறது. தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் முனைப்புடன் களம் இறங்குகிறது. காயத்தால் கடந்த ஆட்டத்தில் ஓய்வு எடுத்த பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி இன்றைய ஆட்டத்தில் ஆடுகிறார்.

* கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வரும் வங்காளதேசத்துக்கு எதிரான 2–வது டெஸ்டில் இரண்டாவது நாளான நேற்று பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 289 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது.

* தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. மழையால் 10 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணியால் 6 விக்கெட்டுக்கு 107 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2–வது 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது.

* மும்பையில் நடந்து வரும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், முந்தைய நாள் ஸ்கோருடன் (8–300) நேற்று தொடர்ந்து விளையாடிய ரஞ்சி சாம்பியன் குஜராத் அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. சிராக் காந்தி 169 ரன்கள் விளாசினார். பின்னர் ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா திணறியது. 2–வது நாள் முடிவில் 72 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் புஜாரா 86 ரன்களில் கேட்ச் ஆனார். இன்று 3–வது நாள் ஆட்டம் நடைபெறும்.

* சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை இழந்த அனுராக தாகூர், இமாச்சலபிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
1 More update

Next Story