தென் மண்டல கபடி போட்டி விக்கிரமசிங்கபுரத்தில் நடக்கிறது


தென் மண்டல கபடி போட்டி விக்கிரமசிங்கபுரத்தில் நடக்கிறது
x
தினத்தந்தி 2 Feb 2017 9:20 PM GMT (Updated: 2 Feb 2017 9:20 PM GMT)

போட்டியை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கம் மற்றும் சிங்கை ஸ்போர்ட்ஸ் லவ்வர்ஸ் கிளப் சார்பில் 64–வது தென் மண்டல கபடி சாம்பியன்ஷிப் போட்டி நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்பட்டியில் உள்ள மைதானத்தில் வருகிற 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, ஐதராபாத் ஆகிய அணிகளுடன் அழைப்பின் பேரில் அந்தமான் அணியும் கலந்து கொள்கிறது. லீக் மற்றும் நாக்–அவுட் முறையில் நடத்தப்படும் இந்த போட்டி தினசரி மாலை 6 மணிக்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும். இந்த போட்டியை ரசிகர்கள் அமர்ந்து கண்டுகளிக்க வசதியாக பிரமாண்ட கேலரி அமைக்கப்படுகிறது. இந்த போட்டியில் மொத்த பரிசுத்தொகை ரூ.6 லட்சமாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 லட்சமும், 2–வது இடம் பெறும் அணிக்கு ரூ.75 ஆயிரமும் பரிசாக அளிக்கப்படும். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை போட்டி அமைப்பு குழு தலைவர் சார்லஸ் மார்ட்டின், செயலாளர் சேகர் ஜெ, மனோகரன், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.


Next Story