உலக பேட்மிண்டன் ஜூனியர் தர வரிசையில் இந்திய வீரர் லக்சயா சென் முதலிடம்


உலக பேட்மிண்டன் ஜூனியர் தர வரிசையில் இந்திய வீரர் லக்சயா சென் முதலிடம்
x
தினத்தந்தி 4 Feb 2017 2:23 AM IST (Updated: 4 Feb 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

உலக பேட்மிண்டன் ஜூனியர் பிரிவு ஒற்றையர் தர வரிசைப்பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளம் வெளியிட்டுள்ளது.

மும்பை,

உலக பேட்மிண்டன் ஜூனியர் பிரிவு ஒற்றையர் தர வரிசைப்பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய வீரர் லக்சயா சென் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். உத்தரகாண்ட்டை சேர்ந்த 15 வயதான லக்சயா சென் பெங்களூருவில் உள்ள பிரகாஷ் படுகோனே அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய ஜூனியர் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற லக்சயா சென், சுவிட்சர்லாந்து டென்மார்க் போட்டிகள் உள்பட பல்வேறு ஜூனியர் சர்வதேச போட்டிகளில் வெற்றியை குவித்ததன் மூலம் நம்பர் ஒன் இடத்தை எட்டி இருக்கிறார். சீனியர் ஒற்றையர் பிரிவு தர வரிசையில் லக்சயா சென் 212-வது இடத்தில் இருக்கிறார். உலக ஜூனியர் பேட்மிண்டன் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை லக்சயா சென் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்திய வீரர்கள் சிரில் வர்மா, ஆதித்யா ஜோஷி ஆகியோர் முதலிடத்தை பிடித்து இருந்தனர்.
1 More update

Next Story