மாநில வாள் வீச்சு: சென்னை வீரர் தங்கப்பதக்கம் வென்றார்


மாநில வாள் வீச்சு: சென்னை வீரர் தங்கப்பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 10 Feb 2017 9:14 PM GMT (Updated: 10 Feb 2017 9:14 PM GMT)

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்- அமைச்சர் கோப்பைக் கான மாநில வாள் வீச்சு போட்டி நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்- அமைச்சர் கோப்பைக் கான மாநில வாள் வீச்சு போட்டி நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது. இதில் ஆண்களுக்கான சேபர் அணிகள் பிரிவில் சென்னை பெரவள்ளூர் டான்போஸ்கோ பள்ளியை சேர்ந்த 17 வயதான அஸ்வின் நம்பியார் தங்கப்பதக்கம் வென்றார். மாநில அளவிலான போட்டியில் அவர் தொடர்ந்து 5-வது முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார். தங்கப்பதக்கம் வென்ற அஸ்வின் நம்பியாருக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 

Next Story