தென் மண்டல கபடி: தமிழக அணி சாம்பியன்


தென் மண்டல கபடி: தமிழக அணி சாம்பியன்
x
தினத்தந்தி 20 Feb 2017 10:15 PM GMT (Updated: 20 Feb 2017 7:34 PM GMT)

தென் மண்டல அளவிலான கபடி போட்டி நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியில் மூன்று நாட்கள் நடந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் சந்தித்தன.

நெல்லை,

விறுவிறுப்பான இந்த மோதலில் தமிழக அணி 42–31 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. வாகை சூடிய தமிழக அணிக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இதன் பெண்கள் பிரிவில் ஆந்திர அணி பட்டத்தை வென்றது.


Next Story