தொழில்முறை குத்துச்சண்டை: விஜேந்தர்சிங்குடன் மோத இருந்த சீன வீரர் விலகல்


தொழில்முறை குத்துச்சண்டை: விஜேந்தர்சிங்குடன் மோத இருந்த சீன வீரர் விலகல்
x
தினத்தந்தி 24 Feb 2017 10:30 PM GMT (Updated: 24 Feb 2017 7:53 PM GMT)

தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து ஆசிய பசிபிக் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீரர் விஜேந்தர்சிங், தனது அடுத்த மோதலில் சீன வீரர் சுல்பிகர் மைமைடியாலியை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

புதுடெல்லி,

இந்த மோதல் மும்பையில் ஏப்ரல் 1–ந் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விஜேந்தர் சிங்குடன் மோத இருந்த சுல்பிகர் போட்டியில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். ஆனால் அவரது விலகல் முடிவுக்கு காரணம் என்ன? என்பது தெரிவிக்கப்படவில்லை. போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ள அதேதேதியில் விஜேந்தர்சிங்குடன் வேறு ஒரு வீரரை மோத வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விஜேந்தர்சிங் அளித்த பேட்டியில், ‘இந்த வி‌ஷயத்தை நான் நேர்மறையானதாகவே பார்க்கிறேன். சுல்பிகர் என்னுடன் மோதாமல் தவிர்த்ததற்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எனது அடுத்த போட்டியில் எதிராளி யாராக இருந்தாலும், அவரை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.


Next Story
  • chat