தேசிய சீனியர் ஜூடோ போட்டி சென்னையில் இன்று தொடக்கம்


தேசிய சீனியர் ஜூடோ போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 25 Feb 2017 10:30 PM GMT (Updated: 25 Feb 2017 7:18 PM GMT)

தமிழ்நாடு ஜூடோ சங்கம் சார்பில் தேசிய சீனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

சென்னை,

நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் 34 அணிகளை சேர்ந்த 600 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இந்த போட்டியில் உடல் எடைப்பிரிவு வாரியாக போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு ஜூடோ சங்க தலைவர் விஜய் மோகன் முரளி தெரிவித்துள்ளார்.


Next Story