பொருளாதார பிரச்சினை காரணமாக ஒலிம்பிக் பதக்கத்தை ரூ.2¼ கோடிக்கு விற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை


பொருளாதார பிரச்சினை காரணமாக ஒலிம்பிக் பதக்கத்தை ரூ.2¼ கோடிக்கு விற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை
x
தினத்தந்தி 28 Feb 2017 11:46 PM GMT (Updated: 2017-03-01T05:16:29+05:30)

பெலாரஸ் நாட்டில் பிறந்தவர் ஒல்கா கோர்பட். ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான இவர் ஒலிம்பிக் போட்டியில் சோவியத் யூனியனுக்காக பங்கேற்றார்.

அரிசோனா,

பெலாரஸ் நாட்டில் பிறந்தவர் ஒல்கா கோர்பட். ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான இவர் ஒலிம்பிக் போட்டியில் சோவியத் யூனியனுக்காக பங்கேற்றார். 1972–ம் ஆண்டு முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தனது 17 வயது வயதில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்று கலக்கினார். 1976–ம் ஆண்டு மான்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளியும் வென்றார். சோவியத் யூனியன் உடைந்த பிறகு 1991–ம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து அங்கு வசித்து வருகிறார். 61 வயதான ஒல்காவின் குடும்பம் தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக தெரிகிறது. இதனால் அவர் ஒலிம்பிக் போட்டியில் வென்ற சில பதக்கங்கள் உள்பட அரிய பரிசு பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்து, ஆன்–லைன் நிறுவனம் மூலம் ஏலத்தில் விட்டுள்ளார். முனிச் ஒலிம்பிக் போட்டியில் வென்றதில் 2 தங்கம், ஒரு வெள்ளி உள்ளிட்ட அவரது உடமைகள் ரூ.2¼ கோடிக்கு ஏலம் போனது.


Next Story