ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து


ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா, சிந்து
x
தினத்தந்தி 9 March 2017 11:30 PM GMT (Updated: 9 March 2017 7:08 PM GMT)

புகழ்பெற்ற ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.

பர்மிங்காம்,

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் ஜப்பானின் நோஜோமி ஒகுஹராவை நேர் செட்டில் தோற்கடித்த இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் நேற்று 2–வது சுற்றில் ஜெர்மனியின் பேபியனே டெப்ரசை எதிர்கொண்டார். இதில் அபாரமாக செயல்பட்ட சாய்னா நேவால் 21–18, 21–10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து 21–12, 21–4 என்ற நேர் செட்டில் டினார் யார் அயூஸ்டினை (இந்தோனேஷியா) 30 நிமிடங்களில் பந்தாடி, கால்இறுதியை எட்டினார். சாய்னாவும், சிந்துவும் கால்இறுதி தடையை வெற்றிகரமாக கடந்தால், இருவரும் அரைஇறுதியில் நேருக்கு நேர் மல்லுகட்ட வேண்டியது வரும்.

ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் பிரனாய் 13–21, 5–21 என்ற நேர் செட்டில் டியான் ஹோவ்வெயுடன் (சீனா) வீழ்ந்தார். இத்துடன் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.


Next Story