ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன்: சிந்து, சாய்னா வெளியேற்றம்


ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன்: சிந்து, சாய்னா வெளியேற்றம்
x
தினத்தந்தி 11 March 2017 10:15 PM GMT (Updated: 11 March 2017 7:29 PM GMT)

பேட்மிண்டனில் மிகவும் உயரியதாக கருதப்படும் ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி தொடர் பர்மிங்காமில் நடந்து வருகிறது.

பர்மிங்காம்,

இதில் நேற்று முன்தினம் இரவு பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனத்தைபே) எதிர்கொண்டார். இதில் யிங்கின் வலுவான ஷாட்டுகளுக்கு முன் ஈடுகொடுக்க முடியாமல் திணறிய சிந்து 14–21, 10–21 என்ற நேர் செட்டில் 34 நிமிடங்களில் சரண் அடைந்தார். இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் சிந்துவிடம் அடைந்த தோல்விக்கு தாய் ஜூ யிங் பழிதீர்த்துக் கொண்டார்.

மற்றொரு கால்இறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால் 20–22, 20–22 என்ற செட் கணக்கில் சங் ஜி ஹியனிடம் (தென்கொரியா) போராடி வீழ்ந்தார். இரு செட்டிலும் சாய்னா ஒரு கட்டத்தில் முன்னிலையில் இருந்து, அதன் பிறகு பின்னடைவுக்குள்ளானார். இந்த ஆட்டம் 54 நிமிடங்கள் நீடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 20–22, 21–13, 18–21 என்ற செட் கணக்கில் ராட்சனோக் இன்டனோனிடம் (தாய்லாந்து) அதிர்ச்சிகரமாக தோல்வி தோல்வியை தழுவினார். சிந்து, சாய்னாவின் வெளியேற்றத்தின் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.


Next Story