துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 14 March 2017 8:25 PM GMT (Updated: 14 March 2017 8:25 PM GMT)

2022–ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்று இருந்த தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரிடம் இருந்து கடந்த திங்கட்கிழமை அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டது.

* 2022–ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்று இருந்த தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரிடம் இருந்து கடந்த திங்கட்கிழமை அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த போட்டியை நடத்த இங்கிலாந்தின் பர்மிங்காம், லிவர்புல் ஆகிய நகரங்கள் விருப்பம் தெரிவித்து இருக்கின்றன.

* இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையே பெங்களூருவில் நடந்த 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உமேஷ்யாதவ் பந்து வீச்சில் எல்.பி.பிடள்யூ. முறையில் ஆட்டம் இழந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித், நடுவரின் முடிவை எதிர்த்து டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்யலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஓய்வறையில் இருந்த வீரர்களிடம் சைகை மூலம் ஆலோசனை பெற்றது பெரும் சர்ச்சையாக வெடித்தது நினைவிருக்கலாம். இந்த பிரச்சினையில் ஸ்டீவன் சுமித் மீது நடுவர் நடவடிக்கை எடுக்காதது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்தனர். இந்த நிலையில் ராஞ்சி மற்றும் தர்மசாலாவில் நடைபெறும் 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான நடுவர் மற்றும் ஆடுகள நடுவர்களை மாற்றம் செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. முந்தைய போட்டியின் போது நடுவராக இருந்த கிறிஸ் பிராட் (இங்கிலாந்து) மாற்றப்பட்டு புதிய போட்டி நடுவராக ரிச்சர்ட்சன் (வெஸ்ட்இண்டீஸ்) நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் புதிய ஆடுகள நடுவர்களாக இயான் கோல்ட் (இங்கிலாந்து), கிறிஸ் காப்னேய் (நியூசிலாந்து) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.


Next Story