சாய் உறுப்பினராக பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா நியமனம்


சாய் உறுப்பினராக பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா நியமனம்
x
தினத்தந்தி 16 March 2017 8:59 PM GMT (Updated: 16 March 2017 8:59 PM GMT)

இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) நிர்வாக குழு உறுப்பினராக இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) நிர்வாக குழு உறுப்பினராக இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஜூவாலா கட்டா கருத்து தெரிவிக்கையில், ‘சாய் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு துறைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே எப்பொழுதும் எனது எண்ணமாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விளையாட்டு துறை மேம்பாட்டுக்கு என்னால் முடிந்ததை செய்ய முயற்சிப்பேன்’ என்றார்.


Next Story