சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து
x
தினத்தந்தி 13 April 2017 7:34 PM GMT (Updated: 13 April 2017 7:33 PM GMT)

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்கு நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்கு நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 19–21, 21–17, 21–8 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியா வீராங்கனை பிட்ரியானியை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21–15, 21–23, 21–16 என்ற செட் கணக்கில் சீன வீரர் குயாவ் பின்னை சாய்த்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 18–21, 21–19, 22–20 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் முஸ்தோபாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

இதற்கிடையில் நேற்று வெளியான புதிய உலக தர வரிசைப்பட்டியலில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2–வது இடத்தில் இருந்து 5–வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறார்.


Next Story