துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 17 April 2017 9:45 PM GMT (Updated: 17 April 2017 6:48 PM GMT)

* இந்திய நட்சத்திர மல்யுத்த வீராங்கனை கீதா போகத் நேற்று அளித்த பேட்டியில், ‘காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்த ஆண்டு நடக்கிறது.

இந்த மெகா போட்டிகளுக்கு ஓராண்டு இருந்தாலும் அதற்கான பயிற்சியை நான் தொடங்கி விட்டேன். இனி பயிற்சியை தீவிரப்படுத்தப்போகிறேன்’ என்றார்.

*சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டியில், நேற்றைய ஆட்டத்தில் ஏ.ஜி.ஓ. அணி 5–0 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயிவேயை பந்தாடியது. அந்த அணியில் அருண் சுரேஷ், பீனான்ஸ் தலா 2 கோல்களும், பட்டீல் விக்ரம் விஷ்வர் ஒரு கோலும் அடித்தனர். முன்னதாக நடந்த ஆரோஸ்– ஆர்.பி.ஐ. அணிகள் இடையிலான முதல் டிவிசன் லீக் ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் முதல் டிவிசன் லீக்கில் எப்.சி.ஐ.– எஸ்.டி.எஸ். (பிற்பகல் 2.30 மணி) அணிகளும், சீனியர் டிவிசன் லீக்கில் சென்னை சிட்டி– இந்துஸ்தான் ஈகிள்ஸ் (மாலை 5 மணி) அணிகளும் மோதுகின்றன.

*ஐ–லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் கிழக்கு பெங்கால் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டிரெவர் மோர்கன் (இங்கிலாந்தை சேர்ந்தவர்) நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஐ.–லீக் தொடரில் தொடர்ந்து 4 ஆட்டங்களில் கிழக்கு பெங்கால் அணி தோற்று இறுதி வாய்ப்பை இழந்ததால் அதற்கு பொறுப்பு ஏற்று அவர் பதவியை விட்டு விலகி இருக்கிறார்.

*ஸ்பெயின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை அரஞ்சா சாஞ்செஸ் விகாரியா. 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். இதில் 4 ஒற்றையர் பட்டங்களும் அடங்கும். டெல்லி வந்த 45 வயதான சாஞ்செஸ் விகாரியா அளித்த பேட்டியில், ‘டென்னிசில் சாதிக்க உயரமானவராகவோ அல்லது பலம் மிக்கவராகவோ இருக்க வேண்டியது அவசியம் இல்லை. டென்னிஸ் மனரீதியான ஆட்டம். அது தான் மிகவும் முக்கியம். அந்த பலம் உங்களிடம் இருந்தால், அதன் பிறகு உடல்ரீதியான கட்டுப்பாடு உள்ளவராக ஆவது மட்டுமல்ல, விளையாட்டு நுட்பங்களையும் அறிந்து கொண்டவராக மாறிவிடலாம். இந்த மாதிரி மனநிலை உள்ளவர்கள் தான் சிக்கலான சூழலிலும் சரியாக ஆடி பட்டத்தை வெல்கிறார்கள்’ என்றார். 1989–ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் ஸ்டெபி கிராப்பை வீழ்த்தியது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story