அமெரிக்க வீராங்கனை செரீனா கர்ப்பமா?


அமெரிக்க வீராங்கனை செரீனா கர்ப்பமா?
x
தினத்தந்தி 19 April 2017 10:30 PM GMT (Updated: 19 April 2017 7:14 PM GMT)

முன்னணி டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்கும், அமெரிக்க தொழிலதிபர் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் கடந்த டிசம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

நியூயார்க்,

ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பிறகு எந்த போட்டியிலும் ஆடாத 35 வயதான செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சமூக வலைதளத்தில் செரீனா, சற்று வயிறு பெருத்து தெரிவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அதன் கீழ் ‘20 வாரங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வேகமாக பரவியது. உடனே அந்த புகைப்படத்தை செரீனா அழித்து விட்டார். இருப்பினும் அது தொடர்பாக அவர் இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.


Next Story