ஆசிய ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்


ஆசிய ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 24 April 2017 10:45 PM GMT (Updated: 24 April 2017 8:23 PM GMT)

இந்திய ஸ்குவாஷ் பெடரே‌ஷன் சார்பில் 19–வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நாளை (26–ந் தேதி) முதல் 30–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

இந்தியா, ஹாங்காங், மலேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், சிங்கப்பூர் உள்பட 12 நாடுகளை சேர்ந்த வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி சென்னையில் நடைபெறுகிறது. சேத்துப்பட்டில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமி மற்றும் ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் தீபிகா பலிக்கல், ஜோஸ்னா சின்னப்பா, ஜூனைனா குருவில்லா ஆகிய வீராங்கனைகளும், ஹரிந்தர் பால் சந்து, வேலவன் செந்தில்குமார் ஆகிய வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு சேர்மன் தேபேந்திரநாத் சாரங்கி, இயக்குனர் சைரஸ் போஞ்சா ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தனர். அப்போது ‘பாகிஸ்தான் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்பதில் விசா பிரச்சினை எழுந்து இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளதே? என்று கேட்டதற்கு ‘இதுவரை அப்படி எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை என்று பதிலளித்தனர்.


Next Story