துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 27 April 2017 8:54 PM GMT (Updated: 27 April 2017 8:53 PM GMT)

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் காயத்தால் விலகிய தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்குக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்–ரவுண்டர் மர்லன் சாமுவேல்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

*டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் காயத்தால் விலகிய தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்குக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்–ரவுண்டர் மர்லன் சாமுவேல்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். 36 வயதான சாமுவேல்ஸ் டெல்லி அணியுடன் நாளை இணைகிறார்.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த தொடரை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் பாகிஸ்தானுக்கு வந்து இரண்டு 20 ஓவர் போட்டிகளில் ஆடும்படி வங்காளதேச அணிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்து இருந்தது. அதற்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் சம்மதிக்கவில்லை. பதிலடியாக வங்காளதேச போட்டி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தள்ளி வைத்துள்ளது.

*ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரிய ‌ஷரபோவா 15 மாத காலம் தடை முடிந்து மீண்டும் களம் திரும்பியுள்ளார். ஜெர்மனியில் நடந்து வரும் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இத்தாலியின் ராபர்ட்டா வின்சியை நேர் செட்டில் வீழ்த்திய ‌ஷரபோவா நேற்று தனது 2–வது சுற்றில் சக நாட்டவர் மகரோவாவை 7–5, 6–1 என்ற நேர் செட்டில் வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.


Next Story