ஆசிய பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து தோல்வி


ஆசிய பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து தோல்வி
x
தினத்தந்தி 29 April 2017 2:33 AM IST (Updated: 29 April 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில்

வுஹான்,

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தர வரிசையில் 7-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனை ஹீ பிஞ்ஜியாவை சந்தித்தார். 1 மணி 17 நிமிடம் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிந்து 15-21, 21-14, 22-24 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி கண்டார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
1 More update

Next Story