துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 30 April 2017 7:58 PM GMT (Updated: 30 April 2017 7:58 PM GMT)

குஜராத் லயன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 30 வயதான ஆண்ட்ரூ டை, மும்பைக்கு எதிரான ஆட்டத்தின் போது பவுண்டரி நோக்கி ஓடிய பந்தை ‘டைவ்’ அடித்து தடுக்க முயன்ற போது இடது தோள்பட்டையில் காயமடைந்தார்.

*குஜராத் லயன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 30 வயதான ஆண்ட்ரூ டை, மும்பைக்கு எதிரான ஆட்டத்தின் போது பவுண்டரி நோக்கி ஓடிய பந்தை ‘டைவ்’ அடித்து தடுக்க முயன்ற போது இடது தோள்பட்டையில் காயமடைந்தார். பரிசோதனையில், தோள்பட்டை மூட்டு விலகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஐ.பி.எல்.–ல் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். முதல் ஆட்டத்திலேயே ‘ஹாட்ரிக்’ உள்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஆண்ட்ரூ டை 6 ஆட்டத்தில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். ஓரிரு நாளில் சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு திரும்பும் அவர், அங்கு சிகிச்சையை தொடருவார்.

*ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு (தென்ஆப்பிரிக்கா) நியமிக்கப்பட்டு இருக்கிறார். இரண்டு மாத காலம் அவர் இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றுவார்.

*ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாத கால தடைக்கு பிறகு மீண்டும் டென்னிஸ் களம் திரும்பிய ரஷிய வீராங்கனை மரிய ‌ஷரபோவா, ஜெர்மனியில் நடந்த ஸ்டட்கர்ட் ஓபன் போட்டியில் பங்கேற்றார். இதில் அவரது சவால் அரைஇறுதியோடு முடிவுக்கு வந்தது. அவரை கிறிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) 3–6, 7–5, 6–4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.


Next Story