ஆசிய மல்யுத்த போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்


ஆசிய மல்யுத்த போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 9 May 2017 7:25 PM GMT (Updated: 9 May 2017 7:25 PM GMT)

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் இன்று (புதன்கிழமை) முதல் 14–ந் தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி,

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் இன்று (புதன்கிழமை) முதல் 14–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஈரான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ஜப்பான், கொரியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்தியா சார்பில் 24 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்றவரான சுஷில்குமார், வெண்கலப்பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத் ஆகியோர் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை. இதேபோல் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான கீதா போகத், பாபிதா போகத் சகோதரிகள் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார். அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

ஆசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வருமாறு:–

பிரீஸ்டைல் ஆண்கள்: சந்தீப் தோமர் (57 கிலோ), ஹர்புல் (61 கிலோ), பஜ்ரங் (65 கிலோ), வினோத் (70 கிலோ), ஜிதேந்தர் (74 கிலோ), சோம்வீர் (86 கிலோ), சத்யவாத் காதியன் (97 கிலோ), சுமித் (125 கிலோ).

பிரீஸ்டைல் பெண்கள்: ரிது (48 கிலோ), பிங்கி (53 கிலோ), வீனஸ் (55 கிலோ), சாக்ஷி மாலிக் (58 கிலோ), சரிதா (60 கிலோ), ரிது (63 கிலோ), திவ்யா காக்ரன் (69 கிலோ), ஜோதி (75 கிலோ).

கிரீகோ ரோமன்: கயானேந்தர் (59 கிலோ), ரவீந்தர் (66 கிலோ), தீபக் (71 கிலோ), குர்பிரீத் (75 கிலோ), ஹர்பிரீத் (80 கிலோ), அனில்குமார் (85 கிலோ), ஹர்தீப் (98 கிலோ), நவீன் (130 கிலோ).


Next Story