இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பிரீஸ்டைல் பிரிவில் பெண்களுக்கான 60 கிலோ உடல் எடைப்பிரிவில்
புதுடெல்லி,
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பிரீஸ்டைல் பிரிவில் பெண்களுக்கான 60 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக், இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ரிசாகோ கவாயை சந்தித்தார். 58 கிலோவில் இருந்து 60 கிலோ பிரிவுக்கு மாறிய சாக்ஷி மாலிக், ரியோ ஒலிம்பிக் போட்டியில் 63 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ரிசாகோ கவாயின் சவாலை சந்திக்க முடியாமல் திணறினார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த நட்சத்திர வீராங்கனையான சாக்ஷி மாலிக் 0–10 என்ற புள்ளி கணக்கில் 2 நிமிடம் 44 வினாடியில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். 55 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெண்கலப்பதக்கம் பெற்றார். இந்திய வீராங்கனை திவ்யா காக்ரன் (69 கிலோ) வெள்ளிப்பதக்கமும், ரிது போகத் (48 கிலோ) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.