அகில இந்திய கராத்தே போட்டி தமிழக வீரர்கள் தங்கப்பதக்கம் வென்றனர்


அகில இந்திய கராத்தே போட்டி தமிழக வீரர்கள் தங்கப்பதக்கம் வென்றனர்
x
தினத்தந்தி 13 May 2017 8:08 PM GMT (Updated: 13 May 2017 8:07 PM GMT)

இந்திய கராத்தே சங்கம் சார்பில் 21 வயதுக்கு உட்பட்ட மாணவ–மாணவிகளுக்கான அகில இந்திய கராத்தே போட்டி டெல்லியில் 3 நாட்கள் நடந்தது.

புதுடெல்லி,

இந்திய கராத்தே சங்கம் சார்பில் 21 வயதுக்கு உட்பட்ட மாணவ–மாணவிகளுக்கான அகில இந்திய கராத்தே போட்டி டெல்லியில் 3 நாட்கள் நடந்தது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 2,500 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து 70–க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியின் 3 நாட்கள் போட்டிகள் முடிவில் தமிழகத்தை சேர்ந்த 5 வீரர்கள் தங்கப்பதக்கம் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், பொதுச்செயலாளர் பரத்சர்மா ஆகியோர் பரிசு வழங்கினார்கள்.


Next Story