துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 24 May 2017 11:15 PM GMT (Updated: 24 May 2017 8:40 PM GMT)

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, ஸ்பெயினின் மாட்ரிட் கிளப்புக்காக விளையாடி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

மெஸ்சிக்கு தண்டனை உறுதி

இவ்வாறு சம்பாதித்த தொகைக்கு வரி செலுத்துவதை தவிர்க்க அவர் பல்வேறு நாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த பார்சிலோனா கோர்ட்டு, மெஸ்சி வரிஏய்ப்பு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறி அவருக்கும், அவரது தந்தைக்கும் 21 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர் ஸ்பெயினின் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு மெஸ்சிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நேற்று உறுதி செய்தது. அதே சமயம் அவரது தந்தைக்கு விதிக்கப்பட்ட தண்டனை 21 மாதத்தில் இருந்து 15 மாதங்களாக குறைக்கப்பட்டது. ஸ்பெயின் சட்டவிதிப்படி வரி பிரச்சினையில் சிக்கி 2 ஆண்டுக்கும் குறைவான தண்டனை பெறுவோர் அதை ஜெயிலில் அனுபவிக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து 339 ரன்கள் குவிப்பு

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. 11–வது சதத்தை நிறைவு செய்த கேப்டன் மோர்கன் 107 ரன்கள் (93 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். அலெக்ஸ் ஹாலெஸ் (61 ரன்), மொயீன் அலி (77 ரன்) அரைசதம் அடித்தனர். அடுத்து 340 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி விளையாடியது.

சிந்துவுக்கு கவுரவ பதவி

சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனத்தின் விளையாட்டு வீரர்–வீராங்கனைகளின் கமி‌ஷனில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு உறுப்பினர் கவுரவம் கிடைத்துள்ளது. இதற்கான போட்டியில் சிந்து 129 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பது சரியே என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story