சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: கால்இறுதியில் இந்திய அணி தோல்வி


சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: கால்இறுதியில் இந்திய அணி தோல்வி
x
தினத்தந்தி 26 May 2017 9:15 PM GMT (Updated: 26 May 2017 7:51 PM GMT)

சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: கால்இறுதியில் இந்திய அணி தோல்வி

கோல்டு கோஸ்ட், -

சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, 10 முறை சாம்பியனான சீனாவை எதிர்கொண்டது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி-சாத்விக் சாய்ராஜ் ஜோடி, சீனாவின் லூ காய்-ஹூயாங் யாகியாங் இணையை சந்தித்தது. 63 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அஸ்வினி ஜோடி 21-16, 13-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 16-21, 17-21 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்கிடம் வீழ்ந்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை 9-21, 11-21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹாய்பெங்-ஷாங் நான் ஜோடியிடம் பணிந்தது. முடிவில் சீனா அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. பெண்கள் ஒற்றையர் (பி.வி.சிந்து), பெண்கள் இரட்டையர் ஆகிய ஆட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்த ஆட்டங்களின் முடிவு போட்டியில் தாக்கம் எதுவும் ஏற்படுத்தாது என்பதால் கடைசி 2 ஆட்டங்களும் கைவிடப்பட்டன.

Next Story