துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 29 May 2017 10:15 PM GMT (Updated: 29 May 2017 9:03 PM GMT)

கடந்த ஆண்டு நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 2–வது சுற்றில் தோல்வி கண்டு ஒலிம்பிக் தகுதி வாய்ப்பை இழந்த 5 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் அதன் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

* இந்தியா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆக்கி அணிகள் இடையிலான போட்டி தொடர் ஜெர்மனியில் வருகிற 1–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஆக்கி அணி, பெங்களூருவில் இருந்து நேற்று அதிகாலை விமானம் மூலம் புறப்பட்டு சென்றது. இந்த 3 நாடுகள் போட்டிகள் முடிந்ததும், இந்திய அணி லண்டனில் நடைபெறும் உலக லீக் அரைஇறுதி சுற்று போட்டியில் கலந்து கொள்கிறது. முன்னதாக லண்டனில் நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி, அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகளுடன் மோதுகிறது. ‘உலக லீக் அரைஇறுதி சுற்றுக்கு இந்திய அணி தயாராக இந்த பயணம் உதவிகரமாக இருக்கும்’ என்று இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

* ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மங்கோலியாவில் அடுத்த மாதம் (ஜூன்) 20–ந் தேதி தொடங்கும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் கலந்து கொள்கிறார். இது குறித்து மேரிகோம் கருத்து தெரிவிக்கையில், ‘நவம்பர் மாதம் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ உடல் எடைப்பிரிவில் கலந்து கொள்ள தயாரானாலும், இந்த போட்டியில் 51 கிலோ உடல் எடைப்பிரிவில் பங்கேற்க இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

* சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் லண்டனில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘முந்தைய ஆட்டத்தில் ஒவ்வொரு ரன் எடுக்கவும் பேட்ஸ்மேன்கள் கடினமாக போராடியதை பார்க்க முடிந்தது. ஆடுகளத்தின் தன்மை அடிக்கடி மாறுவதால் நிலைத்து நின்று ஆடுவது எளிதான காரியம் அல்ல. ஆடுகளத்தில் புற்கள் இருந்ததுடன், தட்பவெப்ப நிலையும் மாறியதால் பந்து ஸ்விங் ஆனது. இதனால் இங்கு ஆக்ரோ‌ஷமாக விளையாடினால் பொருந்தாது. டெஸ்ட் மற்றும் ரஞ்சி போட்டியில் ஆடுவது போல் பொறுமை காத்து ஆட வேண்டும். எல்லா பந்துகளையும் அடித்து விளையாட வேண்டும் என்று நினைக்கக்கூடாது. இது எனக்கு முதலாவது ஐ.சி.சி. போட்டியாகும். இந்த போட்டியில் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இந்த போட்டிக்கு நாங்கள் நன்கு தயாராகி இருக்கிறோம். எல்லா அணிகளுக்கு எதிராகவும் ஆடுவதை போல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் ஆர்வமுடன் விளையாடுவோம்’ என்று தெரிவித்தார்.


Next Story