ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன்: பிரணித், ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன்: பிரணித், ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 22 Jun 2017 7:30 AM GMT (Updated: 22 Jun 2017 7:30 AM GMT)

ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய் பிரணித் மற்றும் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

சிட்னி,


ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன் கடந்த 20 ம் தேதி சிட்னியில் தொடங்கியது. இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று போட்டியில் இந்திய வீரர்கள் சாய் பிரணித் மற்றும் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

பிரணித் சீனாவின் ஹுவாங் யூஷியாங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் பிரணித் 21-15, 18-21, 21-13 என்ற புள்ளி கணக்கில் சீன வீரரை வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் ஸ்ரீகாந்த் உலகின் முதல் தர வீரரான தென்கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்கொண்டார். இப்போட்டியிலும் 15-21, 21-13, 21-13 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். கடந்த ஒரு வாரத்தில் சான் வான்-ஹோ இரண்டு முறை ஸ்ரீகாந்த்திடம் தோல்வி அடைந்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேசியா ஓபன் தொடரின் அரையிறுதி போட்டியில் சான் வான்-ஹோவும் ஸ்ரீகாந்தும் மோதினர். இப்போட்டியில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். அதோடு இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இதை தொடர்ந்து நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் ஸ்ரீகாந்தும் சாய் பிரணித்தும் மோத உள்ளனர்.

Next Story