ஆஸ்திரேலிய ஓபன் பேட்மின்டன் இறுதி போட்டியில் ஸ்ரீகாந்த்


ஆஸ்திரேலிய ஓபன் பேட்மின்டன் இறுதி போட்டியில் ஸ்ரீகாந்த்
x
தினத்தந்தி 24 Jun 2017 6:57 AM GMT (Updated: 24 Jun 2017 6:56 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மின்டன் அரை இறுதி ஆட்டத்தில் சீனாவின் சீ யூஹியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார் ஸ்ரீகாந்த்

சிட்னி, 

ஆஸ்திரேலியா ஓபன் பெட்மிண்டன் கடந்த 20ம் தேதி சிட்னியின் தொடங்கியது. இந்த தொடரின் ஆன்கள் பிரிவின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும் சீனாவின் சீ யூஹியும் மோதினர்.

உலக தரைவரிசையில் ஸ்ரீகாந்த் 1 வது இடத்திலும் சீ யூஹி 6 வது இடத்திலும் உள்ளனர்.
ஸ்ரீகாந்த் கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேஷிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். 

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் தொடக்கம் முதலே பிரணித் ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்றின் முடிவில் ஸ்ரீகாந்த் 21-10 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார்.

இரண்டாவது சுற்று முழுவதும் ஸ்ரீகாந்த் தனது திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அவர் 21-14 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்று  இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஸ்ரீகாந்த் உடன் மோதப்போவது யார் என்படை தீர்மானிக்கும் மற்றொரு அரை இறுதி போட்டியில் சீனாவின் சென் லாங்கும் கொரியாவின் லீ ஹைனும் விளையாடுகின்றனர். 

Next Story