குத்துசண்டை போட்டி நாக்-கவுட் விமர்சனம் சீனாவின் வீரருக்கு விஜேந்தர் சிங் பதிலடி


குத்துசண்டை போட்டி நாக்-கவுட் விமர்சனம் சீனாவின் வீரருக்கு விஜேந்தர் சிங் பதிலடி
x
தினத்தந்தி 28 Jun 2017 11:46 AM GMT (Updated: 2017-06-28T17:16:12+05:30)

சுல்பிகாரின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதத்தில் சுல்பிகார் ஒரு குழந்தை என விஜேந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

மும்பை,

இந்தியாவின் விஜேந்தர் சிங்கிற்கும் சீனாவின் சுல்பிகாருக்கும் இடையேயான குத்துசண்டை போட்டி வருகிற ஆகஸ்டு 5 ம் தேதி மகராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெற உள்ளது. 

செவ்வாய் மும்பையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருவரும் பங்கு பெற்றனர். அப்போது பேட்டி அளித்த சுல்பிகார் விஜேந்தரை நாக்-அவுட் செய்ய போவதாக கூறினார். 

இதற்கு பதிலளித்து பேசிய விஜேந்தர் சிங் சுல்பிகார் ஒரு குழந்தை போல இருப்பதாக கூறினார். அதோடு இதுவரை விஜேந்தரால் தோற்கடிக்கப்பட்ட அனைவரும் சுல்பிகாரை போலதான் தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். 

இதுவரை 8 போட்டிகளில் பங்கு பெற்றுள்ள விஜேந்தர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இதில் ஏழு நாக்-அவுட்டும் அடங்கும். சுல்பிகாரும் 8 போட்டிகளில் பங்கு பெற்று ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் ஐந்து நாக்-அவுட் வெற்றியாகும். ஒரு போட்டி டிராவில் முடிந்தது.

இரு வீரர்களிடையே நடைபெற்றுள்ள உரையாடலை தொடர்ந்து நடைபெற இருக்கும் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story