மாநில மின்னொளி பேட்மிண்டன் போட்டி சென்னையில் நடக்கிறது


மாநில மின்னொளி பேட்மிண்டன் போட்டி சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 22 July 2017 8:52 PM GMT (Updated: 22 July 2017 8:51 PM GMT)

சென்னை வேளச்சேரி டாக்டர் சீத்தாபதி நகர் விளையாட்டு மைதானத்தில் 24–வது மாநில அளவிலான மின்னொளி பேட்மிண்டன் போட்டி

சென்னை,

வேளச்சேரி கோல்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்த நாளையொட்டி சென்னை வேளச்சேரி டாக்டர் சீத்தாபதி நகர் விளையாட்டு மைதானத்தில் 24–வது மாநில அளவிலான மின்னொளி பேட்மிண்டன் போட்டி வருகிற 27–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை நடக்கிறது. ஆண்களுக்கு வெட்ரன்ஸ் (40 வயதுக்கு மேற்பட்டோர்), ஜூனியர் (15 வயதுக்கு உட்பட்டோர்), ஓபன் என 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. போட்டி மாலை 5 மணிக்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும். ஒவ்வொரு அணியிலும் 2 வீரர்கள் இடம் பெற முடியும். ஓபன் பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.15 ஆயிரமும், ரூ.10 ஆயிரமும், வெட்ரன்ஸ் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகளுக்கு முறையே ரூ.10 ஆயிரமும், ரூ.8 ஆயிரமும், ஜூனியர் பிரிவில் முதல் 2 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.8 ஆயிரமும், ரூ.5 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். இந்த தகவலை வேளச்சேரி கோல்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.


Next Story