அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் காஷ்யப், பிரனாய்


அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் காஷ்யப், பிரனாய்
x
தினத்தந்தி 22 July 2017 9:04 PM GMT (Updated: 22 July 2017 9:03 PM GMT)

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டி அனாஹிமில் நடந்து வருகிறது

அனாஹிம்,

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டி அனாஹிமில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப் 21–13, 21–16 என்ற நேர்செட்டில் சக வீரர் சமீர் வர்மாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 10–21, 21–15, 21–18 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரர் கன்டா சுனெயாமாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு ஒரு மணி நேரம் தேவைப்பட்டது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மனு அட்ரி–சுமீத் ரெட்டி ஜோடி 21–18, 22–20 என்ற நேர்செட்டில் ஜப்பானின் ஹிரோகி ஒகமுரா–மசாயுகி ஒனோடேரா இணையை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.


Next Story