துணை கலெக்டர் பொறுப்பை ஏற்றார், பி.வி.சிந்து


துணை கலெக்டர் பொறுப்பை ஏற்றார், பி.வி.சிந்து
x
தினத்தந்தி 9 Aug 2017 10:45 PM GMT (Updated: 9 Aug 2017 8:41 PM GMT)

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ஆந்திர மாநில அரசு ரூ.3 கோடி மற்றும்

ஐதராபாத்,

வீட்டு மனையை பரிசாக வழங்கியதுடன், குரூப்–1 அதிகாரி பதவி அளிக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. கடந்த மாதம் 27–ந் தேதி பி.வி.சிந்துவுக்கு துணை கலெக்டருக்கான பணி நியமன ஆணையை முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார்.

பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பி.வி.சிந்து நேற்று ஆந்திர தலைமை செயலகத்தில் உள்ள நில நிர்வாக தலைமை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு தனது பெற்றோருடன் சென்றார். அந்த அலுவலகத்தில் பி.வி.சிந்து முறைப்படி தனது பதவி பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதற்குரிய ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

அவருக்கு சக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். அடுத்து பி.வி.சிந்து கிளாஸ்கோவில் வருகிற 21–ந் தேதி தொடங்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்கிறார்.


Next Story