புரோ கபடி லீக்: உத்தரபிரதேச அணி 3–வது வெற்றி


புரோ கபடி லீக்: உத்தரபிரதேச அணி 3–வது வெற்றி
x
தினத்தந்தி 12 Aug 2017 10:15 PM GMT (Updated: 12 Aug 2017 8:31 PM GMT)

12 அணிகள் பங்கேற்றுள்ள 5–வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஆமதாபாத்,

இதில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 24–வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) உத்தரபிரதேச யோத்தா அணி 39–32 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 3–வது வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் 29–25 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை தோற்கடித்தது.

இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்–உத்தரபிரதேச யோத்தா (இரவு 8 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்– ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story