உலக குத்துச்சண்டை:முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி
19-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் நடந்து வருகிறது.
ஹம்பர்க்,
19-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் அமித் பான்கல், இத்தாலி வீரர் பெடெரிகோ செர்ராவை சந்தித்தார். இந்த போட்டியில் முதல்முறையாக களம் கண்ட 21 வயதான அமித் பான்கல் 4-1 என்ற புள்ளி கணக்கில் பெடெரிகோ செர்ராவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அமித் பான்கல் அடுத்த சுற்றில் ஈகுவடார் வீரர் கார்லோஸ் கிய்போவை எதிர்கொள்கிறார். 56 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் அறிமுக வீரராக களம் இறங்கிய இந்தியாவின் கவுரவ் பிதுரி 5-0 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் சாம் குட்மேனை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். 2-வது சுற்றில் கவுரவ் பிதுரி, உக்ரைன் வீரர் மைகோலா பட்சென்கோவை சந்திக்கிறார்.

Related Tags :
Next Story