உலக பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் இறுதி ஆட்டத்தில் போராடி வீழ்ந்தார்

உலக பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் ஒகுஹராவிடம் போராடி தோற்றார்.
கிளாஸ்கோ,
உலக பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் ஒகுஹராவிடம் போராடி தோற்றார். இதனால் அவர் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தியடைய வேண்டியதானது.
23–வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஒரு வார காலமாக நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் சீனாவின் சன் யுபெவை நேர் செட்டில் துவம்சம் செய்து முதல் முறையாக இறுதி சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மகுடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் நேற்று பலப்பரீட்சை நடத்தினார். சிந்து உலகத் தரவரிசையில் 4–வது இடமும், ஒகுஹரா 12–வது இடமும் வகிக்கிறார்கள்.
வலுவான இரு மங்கைகள் கோதாவில் இறங்கியதால் எதிர்பார்த்தது போலவே களத்தில் அனல் பறந்தது. அதிரடியான ஷாட்டுகளை விளாசிய சிந்து 13–8 என்று வலுவான முன்னிலை பெற்றார். அதன் பிறகு மளமளவென புள்ளிகளை குவித்த ஒகுஹரா 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து அடுத்த இரு புள்ளிகளை சேகரித்து முதல் செட்டை ஒகுஹரா கைப்பற்றினார்.
2–வது செட்டிலும் சிந்துவின் கை தொடக்கத்தில் ஓங்கினாலும், அதன் பிறகு மாறி மாறி புள்ளிகளை சேர்த்த வண்ணம் இருந்தனர். சிந்து ஆக்ரோஷமாக துள்ளி குதித்து ஷாட்டுகளை அடிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். அவரை விட உயரம் குறைந்த ஒகுஹரா லாவகமாக வலை அருகே பந்தை தட்டி விட்டு புள்ளியாக மாற்றுவதில் ‘தண்ணி’ காட்டினார். இரண்டு முறை கீழே விழுந்த போதிலும் ஒகுஹராவின் உத்வேகம் மட்டும் குறையவில்லை. இந்த செட்டில் 20–17 என்று சிந்து முன்னிலை வகிக்க, அதையும் 20–20 என்று சமன் செய்தார்.
இதன் பிறகு அடுத்த புள்ளியை வசப்படுத்திய சிந்து, செட்டுக்குரிய புள்ளியை எடுக்க பெரிய யுத்தமே நடத்த வேண்டி இருந்தது. ‘தில்’லாக நின்று மல்லுகட்டிய ஒகுஹரா சிந்துவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடினார். இந்த ஒரு புள்ளியில் மட்டும் இருவரும் நம்ப முடியாத அளவுக்கு இடைவிடாது 73 ஷாட்டுகளை அடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். கடைசியில் சிந்து புள்ளியை எடுத்து ஒரு வழியாக இந்த செட்டை தனதாக்கினார்.
இதையடுத்து தங்கப்பதக்கம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி செட்டும் பரபரப்புக்கு குறைவில்லாமல் நகர்ந்தது. நீயா–நானா? என்ற குடுமிபிடிக்கு இடையே புள்ளிகளை எடுத்ததால் இந்த செட்டும் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போனது. ஏற்றம்–இறக்கத்துடன் சென்ற இந்த செட் 20–20 என்று சமநிலை வந்த போது களத்தில் உச்சக்கட்ட டென்ஷன் தொற்றிக் கொண்டது.
இறுதியில் பி.வி.சிந்து, பந்தை வலையில் அடித்து தவறு செய்ததுடன், இன்னொரு ஷாட்டை எடுக்க முடியாமல் அடங்கிப்போனார்.
1 மணி 49 நிமிடங்கள் நடந்த திரிலிங்கான இந்த மோதலில் ஜப்பானின் ஒகுஹரா 21–19, 20–22, 22–20 என்ற செட் கணக்கில் சிந்துவை தோற்கடித்து தங்கப்பதக்கக்தை தட்டிச் சென்றார். சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 40 ஆண்டுகால உலக பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியர்கள் யாரும் தங்கம் வென்றதில்லை.
2015–ம் ஆண்டில் அதிகபட்சமாக சாய்னா நேவால் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். இந்த சோகத்துக்கு சிந்து முடிவு கட்டிவிடுவார் என்று ரசிகர்கள் ஆவல் கொண்டிருந்த நிலையில், மயிரிழையில் அந்த பொன்னான வாய்ப்பு நழுவிப் போனது.
ஐதராபாத்தை சேர்ந்த 22 வயதான சிந்து உலக பேட்மிண்டனில் வெல்லும் 3–வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 2013, 2014–ம்ஆண்டுகளில் வெண்கலம் வென்று இருந்தார். இந்த முறை சாய்னா நேவாலும் வெண்கலம் பெற்று இருக்கிறார். உலக பேட்மிண்டனில் இரு இந்தியர்கள் ஒரே நேரத்தில் பதக்க மேடையில் ஏறுவது இதுவே முதல் நிகழ்வாகும்.
தேசத்திற்கு பெருமை சேர்த்த சிந்துவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் சிந்துவுக்கு ரூ.10 லட்சமும், சாய்னாவுக்கு ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
லின் டான் தோல்வி
ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சீனா வீரர் லின் டான் 20–22, 16–21 என்ற நேர் செட்டில் விக்டர் ஆக்சல்சென்னிடம் (டென்மார்க்) தோல்வியை தழுவினார்.

Related Tags :
Next Story