புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி


புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி
x
தினத்தந்தி 3 Sep 2017 9:04 PM GMT (Updated: 3 Sep 2017 9:04 PM GMT)

5–வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் அரங்கேறிய 60–வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 25–29 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.

கொல்கத்தா,

5–வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் அரங்கேறிய 60–வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 25–29 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. 9–வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி சந்தித்த 6–வது தோல்வி இதுவாகும். முன்னதாக நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 31–25 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை சாய்த்து 5–வது வெற்றியை ருசித்தது.


Next Story