புரோ கபடி லீக்: பாட்னா 5-வது வெற்றி


புரோ கபடி லீக்: பாட்னா 5-வது வெற்றி
x
தினத்தந்தி 5 Sep 2017 10:30 PM GMT (Updated: 5 Sep 2017 7:50 PM GMT)

12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொல்கத்தா,

இதில், கொல்கத்தாவில் நேற்றிரவு அரங்கேறிய 61-வது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் 19-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த பாட்னா பைரட்ஸ் அணி 47-21 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது.

9-வது ஆட்டத்தில் ஆடிய பாட்னா அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 36-29 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 5-வது வெற்றியை ருசித்தது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் (இரவு 8 மணி), பெங்கால் வாரியர்ஸ்-மும்பை (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story