தேசிய ஓபன் தடகளம்: தமிழக அணியில் 70 வீரர்–வீராங்கனைகள்


தேசிய ஓபன் தடகளம்:  தமிழக அணியில் 70 வீரர்–வீராங்கனைகள்
x
தினத்தந்தி 14 Sept 2017 5:00 AM IST (Updated: 14 Sept 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

57–வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக தடகள அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

57–வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 25–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக தடகள அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் அணியில் பிரவீன் முத்துக்குமார், இலக்கியதாசன், சிவக்குமார், வேலாயுதம், நிதின், ஆகாஷ், ராஜேஷ்குமார், ரங்கராஜ், ஜீவசரண், ரகுராம், ஜெயராஜ், பகதூர் பட்டேல், யோகேஷ், விக்டர் சாமுவேல், சுருளி, முகமது நிசான், வீரமணி, சந்தோஷ்குமார், யோகேஷ், மணிகண்டன், சபரி சங்கர், மோதி அருண், முகமது சலாலுதீன், கமல்ராஜ், சுரேந்தர், சூர்யா, சுரேன், சரவணன் உள்பட 37 வீரர்களும், பெண்கள் அணியில் சந்திரலேகா, அர்ச்சனா, ஸ்ரீஜா, சுபா, வித்யா, ரோஷிணி, இளவரசி, பிரியா, கவுதமி, கனிமொழி, நந்தினி, தனலட்சுமி, சிவ அன்பரசி, ராம்லட்சுமி, உமாமகேஸ்வரி, ஷெரின், நிஷா பாணு, மந்த்ரா, ரேகா, மோகனா உள்பட 33 வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர்.
1 More update

Next Story